• Jul 25 2025

இந்த கறுப்பு நிற உடை மட்டும் இத்தனை இலட்சமா-பிரியங்கா சோப்ராவை வியந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரைப்பட உலகின் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் பிரியங்கா சோப்ரா.

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். அத்தோடு சமீபத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர்.

ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பிறகு அமெரிக்காவில் வசித்து வரும் அவர் ஹாலிவுட் டிவி தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் விளம்பர படத்தில் நடிப்பதற்காக ரூ.1.45 லட்சம் மதிப்புள்ள உடையை வாங்கியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

மேலும் இந்த விளம்பரத்துக்கு சாதாரண உடையே போதுமானது என விளம்பர நிறுவனம் தெரிவித்த நிலையிலும் ரூ.1.45 லட்சம் மதிப்புள்ள கறுப்பு நிற மாடர்ன் உடையை அவர் வாங்கியிருக்கிறார். இந்த விளம்பரம் மூலம் தனக்கு மீண்டும் ஹாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைக்கலாமென பிரியங்கா நம்புகிறார் என தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement