• Jul 26 2025

ஆனந்தம் சீரியல் அபிராமியின் மகன் தான் இந்த பிரபல ஹுரோவா?- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் தமது இயல்பான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்த பல நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் சன் டிவியிலும் பி ஒளிபரப்பான   சீரியல் தான் ஆனந்தம்.  இந்த சீரியலில் சுகன்யா, கமலேஷ்,டெல்லி குமார், விஜய் ஆதிராஜ், சதீஷ்குமார், வந்தனா, மோகன் வி ராம், ஆடிட்டர் ஸ்ரீதர், எஸ்.கவிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்

தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரியல் பிறகு மீண்டும் 2014 ஆம் ஆண்டு ஷு தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தற்போது வரும் பிப்ரவரி 20ஆம் தேதி 2023 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.


இந்த சீரியலில் மதன் கதாபாத்திரத்தின் மனைவி அபிராமி என்கிற அபிராமி தேவி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பிருந்தா தாஸ்.கல்லூரி காலத்தில் கிளாசிக்கல் டான்ஸில் புகழ்பெற்ற இவரது திறமையை பார்த்து டிடி மெட்ரோ சேனலில் நம் குடும்பம் என்கிற தொடரில் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது.


 அதன் பிறகு ஆனந்தம் சீரியலில் நடித்த இவர் மிகவும் புகழ் பெற்றார். கிட்டத்தட்ட சொந்த பெயரையே மறக்கும் அளவுக்கு, அழுத்தமான இந்த கதாபாத்திரத்தின் பெயரான அபிராமி என்கிற பெயர் நிலைத்ததாக பல சமயங்களில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.அதன் பிறகு நடிப்புக்கு பிரேக் விட்டிருந்த பிருந்தா தாஸ் தனிப்பட்ட வாழ்க்கையில் பிஸியாகி இருக்கிறார்.

 எனினும் அபிராமி போன்று அழுத்தமான கதாபாத்திரங்கள் வரும்பொழுது நிச்சயமாக நடிக்கலாம் என்றும் இடையில் தெரிவித்திருந்தார். இவருடைய மகன் கிஷன் தாஸ் பிரபல இளம் நடிகராக திரைத்துறையில் வலம் வருகிறார். இவர் வேறு யாரும் அல்ல அண்மையில் வெளிவந்த "முதல் நீ முடிவும் நீ" என்கிற திரைப்படத்தின் ஹீரோவாக இவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement