• Jul 26 2025

ஈரமான ரோஜாவே சீரியல் கேப்ரியல்லா அழகாக இருப்பதற்கு இந்த உணவு தான் காரணமா?- வெளியாகிய செம தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான்  கேப்ரியல்லா.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஷேவில் கலந்து கொண்டதன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக 7C என்ற சீரியலிலும் நடித்திருக்கின்றார்.

மேலும்  தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்திலும் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை வாங்கிக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ஈரமான ரோஜாவே என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.


இதில் நாயகியாக கலக்கிவரும் இவருக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் ஏற்பட்டு வருகிறது.சிறுவயதில் இருந்தே ஒல்லியாக காணப்பட்ட கேப்ரியல்லா ஒரு கட்டத்தில் மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறார்.


இதனால் 2019ம் ஆண்டு ஜிம்மில் சேர்ந்து வொர்க்கவுட் செய்ய தொடங்கினாராம், அப்படியே டிரெயினர் சொன்ன உணவு முறைகளை அப்படியே செய்ய தொடங்கினாராம். காலை வேக வைத்த 4 முட்டைகள், காலை 10 மணிக்கு 10 இட்லி வரை சாப்பிடுவாராம்.

11 மணிக்கு பழங்கள் எடுத்துக் கொள்வாராம். மதியம் மீல்ஸ், வாரத்திற்கு 3 நாள் நான் வெஜ், வயிறு நிரம்பும் வரை சாப்பிடுவாராம், அதிக புரோட்டின் இருக்குமாம்.


மாலை 6 மணி போல் வாழைப்பழம், நட்ஸ், பாதாம், முந்திரி, பிஸிதா ஆகியவை சேர்த்து திக்கான மில்க் ஷேக் குடிப்பாராம்.இவ்வாறு தான் தன்னுடைய உடைலை பளபளபளவென வைத்திருக்கின்றாராம் என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement