• Jul 25 2025

அயலியின் அம்மாவாக நடித்த குருவம்மாவா இது ?- இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார் போல இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில், குஷிமாவதி தயாரிப்பில் உருவாகி பிரபல ஓடிடித்தளத்தில் வெளியாகிய வெப் சீரியல் தான் அயலி. இத்தொடரில் அபிநயஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்திலும், அருவி மதன், அன்மோல், லிங்கா, சிங்கம்புலி, காயத்ரி, தர மெலோடி, பிரகஹீஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றார்கள்.


இந்த கதையில் பெண்கள் வயதிற்கு வந்தபின் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் சாமிக்கு கோபம் வந்து விடும் என நம்பும் மனிதர்களின் வாழ்க்கை முறையை எடுத்துக் காட்டுகின்றது.இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் எந்தப் பெண்ணாலும்  9ஆம் வகுப்பிற்கு மேலே படிக்க முடியவில்லை, அந்த சூழ்நிலையில் 8ஆம் வகுப்பு படித்து வருபவர் தான் அபிநயஸ்ரீ, இவருக்கு நன்றாக படித்து மருத்துவராகவேண்டும் என்பது தான் ஆசை.


 இதனால் தான் வயதிற்கு வந்ததை தன்னுடைய அம்மாவைத் தவிர யாரிடமும் சொல்லவில்லை.இப்படி மிகக்கடுமையாக மூட நம்பிக்கைகளை நம்பும் ஊரில் அந்த பெண் டாக்டர் படித்தாரா? அவரது செயல்பாடுகள் கிராமத்தின் மூட நம்பிக்கையை மாற்றியதா என்பதுதான் இந்த தொடரின் மீதி கதை.


பெண்கள் சுதந்திரம் பற்றி பேசிய அயலி தொடர் கடந்த மாதம் 26தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதில் தமிழ் செல்வியின் அம்மாவாக, குருவம்மா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் அனுமோல்.இவர் இதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.


தொடர்ந்து தற்போது அனுமோல் 10க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement