• Jul 25 2025

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியிலிருந்து இந்த நடுவர் வெளியேற போகிறாரா?- அதிர்ச்சியில் ரசிகரக்ள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ஷோவாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி 4. சமையல் ப்ளஸ் நிறைய கலாட்டா என நிகழ்ச்சி கலகலப்பாக இருக்க ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் உள்ளது.

ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது முடிவை எட்டி வருகிறது.இதில் யார் வெற்றியாளராக இருப்பார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது என்னவென்றால் இந்த 4 சீசனிலும் நடுவராக இருந்து வந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.

காரணம் அவர் கடந்த சில நாட்களாகவே வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாரா அல்லது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாரா என கமெண்ட் செய்கிறார்கள்.

ஒருசிலர் நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது இப்போது எப்படி அவர் விலகுவார் என்றும் கூறுகின்றனர்.


Advertisement

Advertisement