• Jul 25 2025

விதிகளை மீறிய எலிமினேட் ஆன ஷெரினாவிற்கு இவ்வளவு சம்பளமா-ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.இதில்  நேற்று கமல் மாடல் அழகி ஷெரினாவை நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்தார். இந்நிலையில் இவர் மொத்தம் 28 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து இருந்ததால் இவருடைய சம்பள விவரம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இவர் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் பெறுகிறாராம். அப்படி வைத்துப் பார்த்தால் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது 7 லட்சத்தை பல்க்காக பெற்றுக் கொண்டு தான் வெளியேறி உள்ளார்.. கடந்த வாரத்தில் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய ஐந்து நபர்களில் ஷெரினா மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேறி உள்ளார்.

ஆனால் அதில் தான் தற்போது எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்துள்ளது. எப்போதுமே வெளியேறுபவர் யார் என்று கூறப்படும் அந்த எவிக்சன் கார்டில் போட்டியாளர்களின் பெயர் தமிழில் தான் இருக்கும். ஆனால் இந்த வாரம் ஷெரினாவின் பெயர் மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது.

அத்தோடு  நிகழ்ச்சியின் முக்கிய விதிமுறையே தமிழைத் தவிர வேறு மொழிகளில் பேசக்கூடாது என்பதுதான். ஆனால் ஷெரினா ஆயிஷாவிடம் அடிக்கடி மலையாளத்தில் பேசுவது கடும் சர்ச்சையை கிளப்பியது. அத்தோடு  இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடந்தால் ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்யவும் நான் தயங்க மாட்டேன் என்று ஆண்டவர் கடுமையாக கண்டித்தார்.

மேலும் இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிகளை மீறினார் என்ற முக்கிய காரணத்தினால் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டிருப்பதை ரசிகர்களும் புரிந்து கொள்வதற்காகவே கமல் நேற்று நிகழ்ச்சியில் காட்டமாக நடந்து கொண்டார். ஆனால் விதிகளை மீறிய ஷெரினாவிற்கு விஜய் டிவி 7 லட்சத்தை சம்பளமாக கொட்டிக் கொடுத்திருக்கிறது என்பது தான் ஆச்சர்யம்.

இதன் பின்னர்  பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் நிச்சயம் விதிமுறைகளை கடைப்பிடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதை போல் ஷெரினா பெரிதும் பிக் பாஸ் ரசிகர்களை கவர தவறியதால் அவர் வெளியேறியதை குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் சந்தோஷத்தில் திளைக்கின்றனர்.

Advertisement

Advertisement