• Jul 25 2025

நம்ம அறந்தாங்கி நிஷாவா இது?- திருச்சிற்றம்பலம் நித்யா மேனனை விட சூப்பராக பண்ணுகிறாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமது காமெடி திறமையினால் ரசிகர்களைக் கவர்ந்த காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தான் அறந்தாங்கி நிஷா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளழல் பங்குபற்றி வந்த இவர் தற்பொழுது வெள்ளித்திரையிலும் கால்பதித்து நடித்து வருகின்றார்.


அந்த வகையில் கோலமாவு கோகிலா கலகலப்பு 2 திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.


மேலும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் பேசியது போல ரீல் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement