• Jul 25 2025

அடடே இந்த தயாரிப்பாளர் தான் லோகேஷ் கனகராஜின் மாமனாரா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்பொழுது ட்ரெண்டிங் இயக்குநராக வலம் வருபவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வரும் அவர் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் தான் தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அதிகம் எதிர்பார்த்து இருக்கும் படம் என்று கூட சொல்லலாம். மேலும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பல முக்கிய ஹீரோக்களே வெயிட்டிங்கில் இருக்கின்றார்கள்.லோகேஷ் கனகரஜின் மாமனார் யார் தெரியுமா? சௌந்தர் என்பவர் தான். அவர் நடிகர் விஜயகாந்துக்கு நண்பராக இருந்தவர் என்றும், பல படங்களில் நிர்வாக தயாரிப்பாளர் ஆக பணியாற்றி இருக்கிறாராம்.


சமீபத்தில் மரணமடைந்த நடிகர் மனோபாலா இயக்கிய செண்பக தோட்டம் என்ற படத்தில் அவர் தான் நிர்வாக தயாரிப்பாளர் ஆக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தைத் தொடர்ந்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. கார்த்தி, கமல்ஹாசனைத் தொடர்ந்து ரஜினியும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement