• Jul 27 2025

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் சீரியலின் நேரம் மாற்றப்பட்டதற்கு இந்த சீரியல் தான் காரணமா?

stella / 3 years ago

Advertisement

Listen News!

சன் டி.வி, விஜய் டி.வி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. அவ்வாறு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் அபி டெய்லர் . இந்த சீரியலில் இந்த சீரியலில் பூவே பூச்சூடவா ரேஷ்மா - மதன் லீட் ரோலில் நடிக்கின்றனர்.

ரீல் ஜோடிகளான இவர்கள் தற்பொழுது ரியல் ஜோடிகள் ஆனதை அடுத்து இப்போது இருவரும் சேர்ந்து ஒரே சீரியலில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

பொதுவாக .கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. இந்த சேனலில் ஒளிப்பரப்பான சிவகாமி, திருமணம், ‘அம்மன் 3’, ‘இதயத்தை திருடாதே போன்ற சீரியல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன.

இதற்கு முன்பு அபி டெய்லர் சீரியல் கலர்ஸ் தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு பீக் டைமில் ஒளிப்பரப்பாகி வந்தது. இந்நிலையில் கடந்த திங்கள் முதல் (ஜூலை 4 ) ஆம் தேதியில் இருந்து அபி டெய்லர் சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது புதிய நேரத்தில் மாலை 6.30 மணிக்கு அபி டெய்லர் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த நேரம் மாற்றத்துக்கு டி.ஆர்.பி ரேட்டிங் மற்றும் புதியதாக தொடங்கப்பட்ட ‘பச்சைக்கிளி’ சீரியலும் காரணம் என்பதால் தான் நேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement