• Jul 25 2025

சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியாவா இது?- அச்சு அசல் அம்மாவைப் போல கியூட்டாக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் நடிகர் தான் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவைக் காதலித்து கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.

சூர்யாவின் தந்தை,தம்பி,அதே போல ஜோதிகாவின் அக்கா நக்மா என, குடும்பமே சினிமாவில் இருந்து வந்தாலும் இதுவரை தியா மற்றும் தேவ் இருவரும் சினிமாவில் தலை காட்டாமல் வைத்து இருக்கிறார் சூர்யா. இதில், தியா டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி பல மெடல்களையும் வாங்கிகுவித்துள்ளார்


 தேவ், கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.சமீபத்தில் தியா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். தியாவின் மார்க் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டது.தமிழ், ஆங்கிலம், கணக்கு என அனைத்துப்படங்களில் 90க்கு மேல் வாங்கியிருந்தார். தற்போது, தியா நியூயார்க்கில் படித்து வருகிறார். இதுபற்றி சூர்யாவே விருமன் இசைவெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.


இந்நிலையில், தியா க்யூட்டா டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. நியூயார்க்கில் இருந்து தீபாவளி கொண்டாட வந்த போது வீட்டில் நடந்த பார்ட்டியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தியாவை பார்ப்பதற்கு அச்சு அசல் ஜோதியாக போலவே இருக்கிறார். என ரசிபகர்கள் கூறி வருகின்றனர்.



Advertisement

Advertisement