• Jul 26 2025

சற்று முன்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய 5வது போட்டியாளர் இவர் தான்?- வெளியாகிய உறுதியான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க ஸ்வீட் செய்ய வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் முட்டி மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது. அனைவருமே, ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை காட்டி திட்டிக்கொண்டும் இருந்தனர்.

தனலக்ஷ்மி மற்றும் அமுதவாணன் ஆகியோர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் சலிப்படையச் செய்தது.இதனால் கமல் சேர் எந்த போட்டியாளர்களை வெளுத்து வாங்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.


ஒருபுறம் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருந்தாலும், இந்த வாரம் யார் குறைவான வாக்குகளுடன் வெளியேறுவார் என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த வாரம் மகேஸ்வரி அல்லது ராம் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், மகேஸ்வரி தான் டேஞ்சர் சோனில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.எதிலுமே ஈடுபாடு காட்டாமல் இருக்கும் ராம் தான் எலிமினேட் ஆவர் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர் . 


ஆனால் தற்போது எதிர்பார்க்காத வகையில் நடந்த  விஷயம் மகேஸ்வரியின் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement