• Jul 26 2025

இவர் தான் பிக்பாஸ் ஆயிஷாவின் காதலரா ?- அவரே பதிவிட்ட புகைப்படம்- திருமணம் எப்போது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் தான் நடித்து இருந்தார். பின்னர் என்ற ஆயிஷாவுக்கும், இயக்குநருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தொடரில் இருந்து ஆயிஷா விலகினார்

அதன் பின்பு இவர் ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  சத்யா என்ற சீரியலில் நடித்திருந்தார்.இந்த சீரியலில் இவரது காரெக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது.மேலும், இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து இருக்கிறார்.


இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.ஆரம்பத்தில் இருந்தே ஆயிஷா போட்டியாளர்களிடம் மச்சி, மாமா,வாடா என்று ஓவராக நடந்து கொண்டார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 50 நாட்களுக்கு மேல் வீட்டில் இருந்தார்.

இவர் தற்போது தனது காதலன் யார் என்று அறிவிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். காதலனை காட்டாமல் அவருடன் எடுத்த போட்டோவை மட்டும் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் வைரலாகியும் வருகின்றது.இதற்கு முன்னரே ஆயிஷா பிக் பாஸ் வீட்டிற்குள் வராத நிலையில் நெற்றியில் குங்குமம் வைத்து புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 


அப்போதே இவருடைய ரசிகர்கள் பக்கத்தில் குறித்து கேட்டனர். தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இப்போது பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement