• Jul 24 2025

அடுத்த அசீம் இவர்தனா? கோபத்தின் உச்சியில் பிரதீப்! கழுவி ஊத்தும் ரசிகர்கள்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் பிரபலமாக ஔிபரப்பாகி வரும் நிகழ்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி பிக்பாஸ் வீடு, ஸ்மோல் ஹவுஸ் என இம்முறை இரண்டு வீடுகளை க் கொண்டது. ஸ்மோல் ஹவுஸில் இருப்பவர்கள் க்ளீனிங், சமையல் வேலைகளை செய்யவேண்டும் என்பது பிக்பாஸ் ரூல்ஸ்.இந்த ரூல்ஸ்ஸை  மீறியதால் விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரும் இனி ஸ்மால் பாஸ் வீட்டில் தான் இருக்க வேண்டும் என தண்டனை கொடுத்து அனுப்புகின்றார்  பிக் பாஸ்.


அவர்கள் அங்கு போய்விட்டால் குரோசேரி ஷாப்பிங் செய்ய வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்துவதில் சிக்கல் வரலாம் என பிக் பாஸ் கூறுகிறார். அதை கேட்ட பிரதீப் 'ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் இரண்டு பேரை இங்கே அனுப்புங்க ' என கேட்கிறார்.அதனால் கோபப்பட்டு விசித்ரா அவரிடம் சண்டை போடுகிறார். ஒருகட்டத்தில் பலரும் பிரதீப்பை தாக்கி பேச அவர் கோபம் அடைந்து விட்டார்..


பிரதீப் சமையல் செய்யும் டீமிடம் சென்று தனக்கு சிக்கன் ஃப்றை  செய்து திரும்படி கேட்கிறார். மெனுவில் என்ன இருக்கிறதோ அதை தான் செய்ய முடியும் என அவர்கள் கூற அங்கும்வாக்குவாதம்தொடங்குகின்றது. நான் குரோசேரி ஷாப்பிங்கில் சிக்கன் வாங்கி கொடுத்திருக்கிறேன், அதை இன்றே எனக்கு செய்து கொடுங்க, அல்லது எல்லா பொருளையும் எனக்கு திருப்பி கொடுங்க என சண்டையைமீண்டும்  தொடங்கி இருக்கிறார். பிரதீப்.இதைப் பார்த்த்ரசிகர்கள் அடுத்த அசீம் இவர்தானா? என கேலி செய்து இனிவரும் எபிசோட்களில் சண்டைக்கு பஞ்சமில்லை , பிக்பாஸ் சூடு பிடிக்குது சண்டையில் என  பல கமென்ட்களை அள்ளிவீசி வருவது இணையத்தில் வைரலாகின்றது.

Advertisement

Advertisement