• Jul 25 2025

அக்னி நட்சத்திரம் பட நிரோஷாவா இது ? நைட்டி.. மஞ்சள் கயிறு.. ஆளே இப்படி மாறிட்டாரே! திடீரென வைரலாகி வரும் புகைப்படம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் 1988ல் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில்  அறிமுகமான நிரோஷா அடுத்ததாக கமல்ஹாசனின் சூரசம்ஹாரம், ராம்கி உடன் செந்தூரப்பூவே உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.அதன் பின்னர் சீனியர் நடிகையான நிரோஷா சின்னத்திரை மற்றும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

 இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1988ல் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார் நிரோஷா. ஒரு பூங்காவனம் பாடலில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக நீச்சல் அடித்துக் கொண்டே பாடல் காட்சியில் நடித்த நிரோஷா பச்சக்கென்று ரசிகர்கள் மனங்களில் கனவுக்கன்னியாக ஒட்டிக் கொண்டார்.

1995ம் ஆண்டு நடிகர் ராம்கியை திருமணம் செய்துக் கொண்டார் நிரோஷா. எம்.ஆர். ராதாவின் மகளான நிரோஷாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நிரோஷா வைதேகி காத்திருந்தாள் சீரியலில் நடித்தார். தற்போது தெலுங்கில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார்.

கடைசியாக 2021ல் வெளியான சசிகுமாரின் ராஜவம்சம் படத்தில் நடித்த நிரோஷா சோஷியல் மீடியாவில் தொடர்ந்து சீரியலில் நடிக்கும் போட்டோக்களையும் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சற்று முன் வெறும் நைட்டி உடையில் ரொம்பவே எளிமையாக போஸ் கொடுத்திருந்தார் நிரோஷா. அந்த போட்டோவில் அவர் கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறு மட்டுமே இருப்பதை நோட் பண்ண நெட்டிசன்கள் என்ன ஆச்சு, சரடு எங்கே காணோம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஏதாவது சீரியலிலில் இப்படி நடிக்கிறீங்களா? அல்லது வீட்டில் எடுத்த புகைப்படமா? என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சிம்பிளாக இருந்தாலும் செம அழகு என்றும் அப்படியே அக்னி நட்சத்திரம் படத்தில் பார்த்தது போலவே அழகா இருக்கீங்க என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement