• Jul 25 2025

இவரைத்தான் காதலிக்கிறார்களா?.. மீண்டும் காதலில் விழுந்த ரேஷ்மா ..வைரலாகும் புகைப்படம்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விமான பணிப்பெண்ணான ரேஷ்மா பசுபுலேட்டி, சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையில்  சன் தொலைக்காட்சியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.அதன் பின், வாணி ராணி, மரகத வீணை, காயத்ரி, பாக்கியலட்சுமி போன்ற பல சீரியல்களில் முக்கியமான வேடத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார் என்றே சொல்லலாம்.

சீரியலில் நடித்ததைத் தொடர்ந்து  வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் மனைவியாக புஷ்பா என் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இவருக்கு இது முதல் படம் என்றாலும், முதல் படத்திலேயே ரேஷ்மாவின் கேரக்டர் பெயர் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த படத்தில் புஷ்பா புருஷனா என்ற வசனம் தற்போது வரை மக்களிடையே பிரபலமாகவே இருக்கிறது.

புஷ்பா புருஷன் வசனத்தின் மூலம் பிரபலான ரேஷ்மா தற்போது கிச்சா பொண்டாட்டியாக பிரபலமாகி உள்ளார். நடிகர் விமல் நடிப்பில் பிரசாத் பாண்டிராஜ் இயக்கிய வெப் சிரீஸ் விலங்கு கிச்சாவின் மனைவியாக நடித்துள்ளார். 

இந்த தொடரில் இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த தொடரில் நடித்த அனைவரின் நடிப்பும் பாராட்டப்பட்டாலும் கிச்சா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது.

இந்நிலையில், நடிகை ரேஷ்மா ஆண் நண்பர் நிஷாந்த் ரவிச்சந்திரனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து, வாழ்க்கை மிகவும் குறுகலானது அதனை உங்களை சிரிக்க வைத்து உங்களிடம் அன்பு காட்டும் நபருடன் நேரத்தை செலவழியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் இவரைத்தான் காதலிக்கிறார்களா என்றும், மீண்டும் காதலில் விழுந்து விட்டீர்களா என்றும் கேட்டு வருகின்றனர்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் முதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்து அவர்கள் சம்மதத்துடன் கோலாகலமாக நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து, அமெரிக்கா சென்ற ரேஷ்மா, அங்கு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண வாழ்க்கையும் நிலைக்காமல் போகவே, அவரையும் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement