• Jul 25 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் நிஜ கணவர் இவர் தானா..? வெளியானது புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான தனம் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா .

இச் சீரியலிலின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்த இவர் இதற்கு முன் பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவின், திருவனந்தபுரத்தில் பிறந்த சுஜிதா, இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.


அதன் பிறகு சத்யராஜின் பூவிழி வாசலிலே, ரஜினியின் மனிதன், மம்மூட்டியின் அழகன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். வாலி, இருவர், பள்ளிக்கூடம், தாண்டவம், தியா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


அத்தோடு கடந்த 2012 ஆம் ஆண்டு சுஜிதாவிற்கு தனுஷ் என்பவருடன் திருமணமாகியது.இவருக்கு தன்வின் என்ற மகனும் உள்ளார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா தற்போது தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இதோ அந்த பதிவு...




Advertisement

Advertisement