• Jul 25 2025

கருக்கலைப்பு செய்தாரா சமந்தா..? விவாகரத்துக்கான உண்மைக் காரணம் இதுதானா.. முக்கிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாப் பிரபலங்களான நாக சைதன்யா மற்றும் சமந்தாஆகிய இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் அக்டோபர் -6, 2017-இல் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினர் நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் அக்டோபர் -2, 2021-இல் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து கொண்டனர்.


இவர்களின் பிரிவிற்கான உண்மைக் காரணம் இதுவரை யாருக்குமே தெரியாது. இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகரும், சென்சார் நிபுணருமான உமர் சந்து சமந்தாவின் விவாகரத்து குறித்து ஷாக்கிங் ட்விட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இப்பதிவில் சமந்தா கூறியிருப்பது போல் அவர் பதிவு செய்துள்ளார். 


அதாவது "நாகசைத்தாயா ஒரு மோசமான கணவர். என்னை அவர் மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தியுள்ளார். நான் கர்ப்பமாக இருந்தேன், ஆனால் கருக்கலைப்பு செய்துவிட்டேன். கடவுளுக்கு நன்றி, விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 


இவரின் இந்தப் பதிவானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதோடு திரையுலகில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

Advertisement