• Jul 25 2025

47வயதில் குழந்தை பெற்ற நடிகை ரேவதி... கணவருடனான விவாகரத்திற்கு காரணம் இதுதானா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறிப்பாக 80களில் பிரபல நடிகையாகத் திகழ்ந்து வந்தவர் நடிகை ரேவதி. இவரினுடைய அடக்கவொடுக்கமான நடிப்பிற்கென்றே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அந்தவகையில் 'மண் வாசனை' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தன்னுடைய அறிமுகப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனால் ரஜினி, கமல், பிரபு, மோகன், விஜயகாந்த் எனப் பலருடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


நடிகை ரேவதியின் குடும்ப வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் இவர் நடிகரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் மேனன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் இத்தம்பதி குழந்தை இல்லாமல் தவித்தனர். 

இதன் காரணமாக இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து கொண்டனர். இவ்வாறாக விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்த ரேவதி 47 வயதைக் கடந்தாலும், டெஸ்ட் டியூப் மூலமாக குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். 


இப்படி நடிகை ரேவதியை எதை காரணம் காட்டி ஒதுக்கினார்களோ, அதை பெற்று தற்போது சந்தோஷமாக தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

Advertisement

Advertisement