• Jul 24 2025

லியோ திரைப்பட கலவை விமர்சனத்திற்கும், ரசிகர்களின் ஏமாற்றத்திற்கும் இதுவா காரணம்?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய லியோ திரைப்படத்தில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சில விடயங்கள் லியோ திரைப்படத்தில் இடம் பெறாதது. ஏமாற்றத்தை கொடுத்து இருக்கின்றது.


பொதுவாக லோகேஷ் படம் என்றாலே எப்போதுமே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் சில விஷயங்களை நினைத்து சென்றிருப்பார்கள்.அதை பூர்த்தி செய்வதோடு மட்டும் அல்லாமல் நாம் எதிர்பார்க்காத பல விஷயங்களையும் லோகேஷ் கொடுத்து ஆச்சரியத்தில் உறைய வைப்பார்.


ரசிகர்கள்  மூன்று விடயத்தை எதிர்பார்த்து படம் பார்க்க  சென்றுள்ளனர். தளபதி படம் என்றால் எப்போதும் ஆக்சன் காட்சிகள் அதிரடியாக இருக்கும்.விஜய்க்கு என்று சில மாஸ் சீன்கள் இருக்கும்,என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கின்றது. 


அடுத்ததாக சஞ்சய்தத், அர்ஜுன் போல பிரபலங்கள் நடித்திருப்பதால் வலுவான வில்லனுக்கு உண்டான கதாபாத்திரம் இருக்கும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரம் போல் லியோ படத்திற்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு வில்லன் பாத்திரங்கள் எதுவும் எடுபடவில்லை. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் போன்ற ஒரு முக்கியகதாபாத்திரம் கேமியோவில் இடம் பெறும் என பெரிதும் நம்பப்பட்டது, இல்லை எனில் கமலாவது காட்சியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது குரல் மட்டுமே  பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ரசிகர்களுக்கு ஏமாற்றமாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement