• Jul 24 2025

நடிகை கீர்த்தி சுரேஷ் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்த இது தான் காரணமா?- கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி.. முருகன், ரெமோ, தொடரி, பைரவா என பல படங்களில் முண்ணனி ஹீரோக்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார். அந்த கதாப்பாத்திரத்திற்கு அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டது.


இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு என அனைத்திலுமே முன்னனி நாயகியாக உயர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இவரது கைவசம் தற்பொழுது நான்கு படங்கை தனது கைவசம் வைத்துள்ளார்.

 சில தினங்களுக்கு முன்பு தான் கண்ணிவெடி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார்.அறிமுக இயக்குநர் கணேஷ் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜர்னலிஸ்ட் ஆக நடிக்கிறார்.கீர்த்தி சுரேஷ் இதுவரை ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது அதை 3 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.


அவர் அடுத்து பாலிவுட்டில் நுழைவதால் இப்படி சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாரா என கேள்வி எழுந்திருக்கிறது. அட்லியின் ஹிந்தி படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிகர் வருண் தவான் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement