• Jul 24 2025

இயக்குநர் சங்கர் படத்தினை விஜய் ஒதுக்க இதுதான் காரணம் இது தானா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் தற்போது ராம் சரணின் கேம் ஓவர் படத்தினையும் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தினையும் இயக்கி வருகிறார். எனினும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நண்பன் படத்திற்கு முன் விஜய் முதல்வன் படத்தில் நடிக்கவிருந்தது.

ஆனால் அது ஏன் நடக்காமல் போனது என்ன பிரச்சனை என்பது பற்றி கூறியிருக்கிறார் இயக்குநர் சங்கர். அப்பேட்டியில், விஜய்யிடம் கால்ஷீட் கேட்க என் தரப்பில் இருந்து அசோசியேட்டாக இருந்தவர் எஸ் ஏ சந்திரசேகரிடம் பேசியிருந்தார்.

அப்போது பேசும் போது இருவருக்கும் இடையில் ஏதோ ஒன்று சரியா அமையாமல் போனது. அதன்பின்னர் எஸ் ஏ சி என்னிடம் வந்து, நாமலே பேசியிருக்கலாம், நான் எப்படி உன்னிடம் பேசலாம் என்று நினைத்திருந்தேன், நீயும் அப்படி நினைத்து வேறொருவரை அனுப்பிட்ட என்று கூறினார்.

பரவாயில்லை சார் இன்னொரு படம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினேன் என்று விஜய் நடிக்க முடியாமல் போன காரணத்தை பல ஆண்டுகள் கழித்து கூறியிருக்கிறார் இயக்குநர் சங்கர்.


Advertisement

Advertisement