• Jul 24 2025

கமலை விட்டு கௌதமி பிரிய இது தான் காரணமா?- நீண்ட நாட்களுக்கு பிறகு உண்மையை உடைத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கௌதமி.தெலுங்கு திரையுலகு மூலம் சினிமாவில் அறிமுகமாகிய இவர்,தமிழில் ரஜினிகாந்துடன் குருசிஷ்யன் படத்தில் அறிமுகமாகினார்.

முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதையடுத்து, 90கால கட்டத்தில் பல ரஜினி,ராமராஜன்,சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ரஜினியுடன் பல படத்தில் நடித்த கௌதமியை ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அண்ணி என்றே அழைத்தனர். அதன் பின் கமலுடன் சேர்ந்து அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன் படத்தில் நடித்தார். 


அந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.இப்படி பிஸியாக இருந்த நேரத்தில் கௌதமி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதில் இருந்து மீண்டு வந்த கௌதமி, யாருமே இல்லாமல் மன அழுத்தத்தில் இருந்தபோது, கமல், கௌதமிக்கு பல உதவிகளை செய்தார்.இருவரும் ஒரே வீட்டில் இருந்தனர். இருவர் குறித்து வந்த பல கிசுகிசு செய்திகளை மற்றும் விமர்சனத்தை இரண்டு பேருமே கண்டுக்கொள்ளவில்லை.


ஆனால், திடீரென கௌதமி என் மகளின் படிப்புக்காக,என் மகளுக்காக இந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியேறுகிறேன் என்ற நாகரீகமாக ஒரு பதிவினைப்பகிர்ந்து விட்டு இருவரும் உறவை முறித்துக்கொண்டனர். ஆனால், சில ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் கண்ணு மூக்கு காது வைத்து எழுதுவதாக செய்யாறு பாலு அந்த பேட்டியில் கமல் கௌதமி உதவி குறித்து கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement