• Jul 26 2025

அரசியல் களமிறங்க நிதி சேகரித்து வரும் விஜய்- அவசரஅவசரமாக படங்களில் கமிட்டாக இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங் தற்பொழுது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது . இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது.

இவ்வாறு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய் குறித்து அடிக்கடி தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.


அதற்கு ஏற்றாற்போல் சில அரசியல் சார்ந்த விஷயங்களையும் அவர் சமீபகாலமாக தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார்.கண்டிப்பாக விஜய் 2026ஆம் ஆண்டு அரசியல் கட்சி துவங்குவார் என கூறப்படுகிறது.


இந்நிலையில், அரசியல் கட்சியின் முதலீட்டிற்காக தான் தற்போது பணம் சேர்த்து வருகிறாராம் விஜய்.இதனால் தான் அடுத்தடுத்து படங்களை கூட உடனடியாக கமிட் செய்து நடிக்க தயாராகியுள்ளாராம். ஒவ்வொரு படத்திற்கு ரூ. 125 கோடிக்கும் மேல் விஜய் சம்பளம் வாங்கவுள்ளார் என கூறப்படுகிறது.அரசியல் கட்சியின் முதலீட்டிற்காக தான் விஜய் அவசர அவசரமாக அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement