• Jul 25 2025

பல ஸ்டார்களை உருவாக்கிய இவருக்கு இப்படி ஒரு நிலைமையா? யாருமே கண்டுகொள்ளாத பரிதாபம்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றிவர் கே கே ரத்தினம். இவரை பலரும் ஜூடோ ரத்தினம் என்று தான் அழைப்பார்கள்.இவர் 1959 -ம் ஆண்டு தாமரை குளம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 

இதன் பின் 1966 -ல் வல்லவன் ஒருவன் படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக களமிறங்கினர்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் இயக்குநராக வலம் வந்த இவர், கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான தலைநகரம் படத்தில் நடித்திருந்தார்.



பொன்னம்பலம், விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன் போன்ற பல பிரபலங்களை உருவாக்கியவர் ஜூடோ ரத்தினம் தானாம். 

தற்போது 92 வயதான இவர் மூன்றுமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறாராம். இவரை சினிமா துறையினர் யாரும் கண்டுகொள்வதில்லை, பார்க்கவும் எந்த பிரபலமும் வருவதில்லை என சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement