• Jul 26 2025

நடிகர் தீபக்கின் மகனா இது....மாறி மாறி முத்தம் கொடுக்கும் பிரபலங்கள்..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சித் தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் பிரபலநடிகரும், தொகுப்பாளருமான தீபக்கும் ஒருவர். 

 தீபக் 1999 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜென்மம் எக்ஸ் என்ற திகில் தொடரில் நடித்திருந்தார். அதன்பிறகு சன் டிவி ஜெயா, டிவி ராஜ் டிவி போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து வந்தார். மேலும் இவர் நடித்த பல்வேறு தொடர்கள் பெரும் வெற்றியையும் கண்டது. ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது  என்றால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் தான். 



அத்தோடு இவர் அண்ணி, கீதாஞ்சலி, மனைவி, செல்வி, பந்தம், அரசி, திருமதி செல்வம், ரோஜா கூட்டம் என்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார் தீபக் அதேபோல தனது சிறப்பான நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் .தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் கதாநாயகனான நடித்து வருகின்றார்.



நடிப்பில் அசத்தியது போன்று தனது தொகுப்பாளர் பணியிலும் அசத்திய தீபக் தனது ஆங்கரிங் திறமை மூலமும் ரசிகர்களை கவர்ந்தார். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த தீபக், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  வருகிறார்.

இதுமட்டுமல்லாது நடிகர் தீபக் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.இதுவரைகாதல் வைரஸ், தகதிமிதா, சரோஜா, உயர்திரு 420 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தீபக். மேலும், இவர் கதாநாயகனாக நடித்த இவனுக்கு தண்ணில கண்டம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. 



இந்நிலையில் தீபக்கிற்கு திருமணம் ஆகி ஒரு மகனும் உள்ளார்.தற்போது அவருக்கு தீபக்கும் அவரது மனைவியும் சேர்ந்து முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவை இட்டு it’s always fun to play with our son .. n he likes it பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement