• Jul 26 2025

நடிகர் சேது ராமன் மறைவிற்கு பின் பிறந்த அவரது ஆண் குழந்தையா இது..வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  நாயகனாக அறிமுகமான ஒரு மருத்துவர் தான் சேதுராமன்.

இப்படத்திற்கு பிறகு வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களிலும் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். மேலும் இவர் சரும நிபுணர் எனப்படும் Dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார்.

சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனையையும் 2016ம் ஆண்டு திறந்தார்.அத்தோடு இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார், அவரின் இறப்பு எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது இருந்தது.

சேதுராமன் இறப்பின் போது இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த அவரது மனைவி அந்த நேரத்தில் 5 மாதமாம். சேதுராமன் இறப்பிற்கு பின்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைகள் மற்றும் மருத்துவமனையை அவரது மனைவி உமா தான்  தற்போது பார்த்துக்கொண்டு வருகின்றார்.



அண்மையில் சேதுராமன் பயன்படுத்திய சென்ட் பாட்டில போட்டோவாக  போட்டு எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார் உமா.


இன்று உணர்ச்சிகள் அதிகமாக இருந்தது. நீங்கள் என்னருகில் இருப்பதை என் மூளை ஒரு நிமிடம் உணர்ந்தது. என்னுள் உன்னை மட்டுமே உணரமுடியும் என்று உன்னைத் உன்னை ஆரம்பித்தேன். நீங்கள் இல்லாத என் வாழ்க்கையை நான் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன் என நீண்ட பதிவு போட்டுள்ளார்.இதில் அவரது பிள்ளைகளுடள் சேர்ந்த புகைப்படத்தை இட்டே இந்த பதிவை போட்டுள்ளார்.



Advertisement

Advertisement