• Jul 25 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் மகனா இது?- இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே- வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் 'சுஜிதா' இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கி, ஹீரோவாக நடித்து, கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான ’முந்தானை முடிச்சு’ பாக்யராஜின் குழந்தையாக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து, பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் தன்னுடைய கியூட்டான சிரிப்பாலும், அழைத்தாலும் மயக்கும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சுஜிதா,  ’பள்ளிக்கூடம்’ ’தாண்டவம்’ ’தியா’ உள்ளிட்ட படங்களில் அவரது குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.


பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன பின்னர்,  சில காலம் சீரியல் மற்றும் திரைப்படங்கள் நடிக்க ரெஸ்ட் விட்ட நிலையில், தற்போது மீண்டும் ரசிகர்களை கவரும் விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 


இந்த நிலையில் நடிகை சுஜிதா - தனுஷ் தம்பதிகளுக்கு தன்வின் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். ஏற்கனவே சொந்த வீட்டில் வசித்து வரும், சுஜிதா அண்மையில் புதிய வீடு ஒன்றையும் வாங்கியிருந்தார். இப்படியான நிலையில் சுஜிதா நீண்ட நாளுக்குப் பிறகு தனது மகனுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அடடே அதற்குள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement