• Jul 26 2025

பாரதி கண்ணம்மா புகழ் பரீனாவின் மகனா இது..இப்படி வளர்ந்திட்டாரே..வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக இருந்து சீரியலில் களமிறங்கியவர் தான் நடிகை பரீனா.கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரசிகர்கள் தற்போது வில்லியாக நடிப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா .இதில் வில்லியாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் பரீனா.

சின்ன சின்னதாக சீரியல்கள் பலவற்றில் இவர் நடித்திருந்தாலும் பாரதி கண்ணம்மா தொடர் தான் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

மேலும் இந்த தொடரில் வெண்பா வேடம் பரீனாவிற்கே மிகவும் பிடித்துபோக தான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் ஓய்வு எடுக்காமல் இதில் நடித்து வந்தார்.



தற்போது குழந்தை பெற்ற பின்னும் கேப் இல்லாமல் நடித்து வருகிறார் பரீனா.இந்நிலையில் இவருக்கு மகன் பிறந்து ஒரு வருடம் ஆகிவிட்டதாம்.தற்போது அவரின் மகன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.அதைப் பார்த்து அதற்குள்ளே அவருக்கு ஒரு வயதாகிவிட்டதா..சோ கியுட் என்று கூறி வருவதுடன் இன்னமும் அந்த பாரதி கண்ணம்மா சீரியல் முடியவில்லையே சோ சாட் எனக் கூறி வருகின்றனர்.







Advertisement

Advertisement