• Jul 26 2025

மறைந்த மலேசியா வாசுதேவன் மகனா இவர்?- எப்படி பாடுகின்றார் பாருங்களன் ...தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  தனித்துவமான குரல் கொண்ட பாடகர்களில் ஒருவர் தான் மலேசியா வாசுதேவன். 

இளையராஜா இசையில் 16 வயதினிலே பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் கலக்கிய இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை  தமிழ் ரசிகர்களுக்காக பாடியிருக்கிறார். மலேசியா வாசுதேவனுக்கு யுகேந்திரன் என்ற மகனும், பிரசாந்தினி என்ற மகளும் இருக்கின்றனர்.



யுகேந்திரன் தமிழில் சில படங்களும் நடித்துள்ளார், சினிமா துறையில் இவர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், எஸ்.பி.சரண் உள்ளிட்டோருடன் நெருங்கி பழகுபவர்.

யுகேந்திரன் மாலினி என்பவரை திருமணம் செய்துகொண்டு இப்போது நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு விஷாஷன், கிஷன், தர்ஷன் என்ற மூன்று ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.



நியூசிலாந்தின் ஆக்லாந்தில் 2017ஆம் ஆண்டிலிருந்து வசித்துவரும் யுகேந்திரன் ரம்பூட்டான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார்.

தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு பிடித்த பாடல்களை பாடி வீடியோ வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் நன்றாக பாடுகிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement