• Jul 24 2025

ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் டைட்டில் இது தானா?- வெளியாக முன்னரே இணையத்தில் லீக்கான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் இறுதியாக ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகியது. ஆனால் இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை அடுத்து இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ப்ராஜெக்ட் கே என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், நாளை அதிகாலை அமெரிக்காவின் காமிக் கான் நிகழ்ச்சியில் இந்த படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸை வெளியிட் படக்குழு திட்டமிட்டுள்ளது.ப்ராஜெக்ட் கே படத்தின் பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


மேலும் இப்படமானது K என்றால் கல்கியா என்கிற ஒரு கெஸ் ஓடிக்கொண்டிருந்த நிலையில், படம் தொடங்கும் போதே இந்த படம் டைம் மெஷின் சம்பந்தமான படம் என்றும் சொல்லப்பட்டது. மேலும், ஒரு பெரிய டயரை படக்குழு உருவாக்கிய வீடியோவையும் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், தற்போது கசிந்துள்ள டைட்டில் என்னவென்றால் காலச்சக்ரா என்பது தான் அந்த Kவுக்கான அர்த்தம் என்றும் பிரபாஸ் இந்த படத்தில் டைம் மெஷின் மூலமாக உலகுக்கு வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறார் எனக் கூறுகின்றனர். 


இதுதான் ஒரிஜினல் டைட்டிலா? அல்லது உண்மையான டைட்டில் என்ன என்பது நாளை காலை தெரிந்து விடும். காலசக்ரா டைட்டிலே நல்லாத்தான் இருக்கு, நிச்சயம் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் என பிரபாஸ் ரசிகர்கள் அந்த டைட்டிலுடன் லீக்கான போஸ்டரை டிரெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement