• Jul 24 2025

கோடிக்கணக்கில் நஷ்டத்தைக் கொடுத்த வாரிசு.. அப்போ உண்மைத் தகவல் இதுதானா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வம்சி இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் பொங்கல் விருந்தாக சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தினை தில் ராஜு பிரமாண்டமாக தயாரித்திருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மேலும் இவர்களுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த் என பல திரைப்பிரபலங்களும் நடித்திருந்தனர்.


உலகளவில் இப்படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்படமானது தமிழகத்தில் ரூ. 70 கோடிக்கு விற்கப்பட்டது. அத்தோடு ரூ. 2 கோடி விளம்பரத்திற்காக மட்டுமே செலவு செய்யப்பட்டது. 


இந்நிலையில் வாரிசு திரைப்படம் ஆனது தமிழகத்தில் கொடுத்துள்ள ஷேர் ரூ. 71 கோடி மட்டுமே எனத் தற்போது கூறப்படுகின்றது. அந்தவகையில் இதை வைத்து பார்க்கும் பொழுது தமிழகத்தில் வாரிசு படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு ரூ. 1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


அதிலும் குறிப்பாக தூத்துக்குடி ஏரியாக்களில் இப்படம் லாபத்தை கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். எது எவ்வாறாயினும் தமிழகத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் போட்ட பணம் கைக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement