• Jul 25 2025

அடடே விஜய் சேதுபதியின் மகனா இது?- அப்பாவுக்கே டஃப் கொடுப்பார் போல இருக்கே- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வரபவர் தான் விஜய் சேதுபதி. குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது வில்லன் மற்றும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து அசத்தி வருகின்றார்.

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் இப்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்துள்ளார்.தமிழைத் தவிர ஏனைய மொழிகளிலும் நடித்து வருகின்றார்.

ஆனால் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் படங்கள் சரியான வரவேற்பை பெறுவதில்லை, அவர் விரைவில் ஒரு மாஸ் ஹிட் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஜெஸ்ஸி என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதிக்கு சூர்யா மற்றும் ஸ்ரீஜா என மகன் மற்றும் மகள் உள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தமிழில் சில படங்களில் தலைகாட்டியுள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதனைப் பார்த்த ரசிகர்கள். அடடே அதற்குள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement