• Jul 24 2025

இதான் சம்பவமா?...இதனால் தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிட்டாரா ஆர்யன்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. 

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொடுக்கிறது.


 இந்தநிலையில் சமீபத்தில் இந்த சீரியல் இருந்து செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் விலகி இருக்கிறார். இந்த சீரியலில் செழியன் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர் இதற்கு முன்பு கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்தார். மேலும், தவிர்க்க முடியாத காரணங்களால் தான் பாக்யலக்ஷ்மி தொடரிலிருந்து ஆர்யன் விலகியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வாரம் முதல் புதிய செழியன் நடித்திருக்கும் காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது ஆரியன் திடீரென சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தற்போது விஜய் டிவியின் புது சீரியல் கனா காணும் காலங்கள் 2. இந்த தொடர் விரைவில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளிவர இருக்கிறது. 

இந்த நிலையில் இதில் ஆரியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அதனால் தான் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் ஆர்யன் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் லைவ் வீடியோவில் பேசுவது வழக்கம். 

அப்போது ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியல் பற்றி கேட்டதற்கு, அதை ஏன் ஞாபகப்படுத்திகிறீர்கள் என்று ஆர்யன் சொல்லி இருக்கிறார். மேலும், ஆர்யன் நடிக்கும் கனா காணும் காலங்கள் 2 சீரியல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கூடிய விரைவில் வெளியாக இருக்கு என்ற தகவல் உறுதியாகி உள்ளது. தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில்  படு வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement