• Jul 24 2025

TTF வாசனுக்கும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் நடிகைக்கும் திருமணமா?- தெளிவுபடுத்திய சீரியல் நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் சங்கீதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். இருப்பினும் இவரைப் பிரபல்யமாகியது ராஜா ராணி சீசன் 2 சீரியல் தான். இது தவிர போட்டோ ஷுட் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் என இன்ஸ்டாவில் பகிர்ந்து எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.

Youtuber மற்றும் biker TTF Vasan பற்றி எல்லோருக்கும் தெரியும். இவர் இப்போது சினிமாவில் படமும் நடிக்க தொடங்கியுள்ளார், அந்த வகையில் மஞ்சள் வீரன் என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.


இந்த அறிவிப்பு வந்த சில நாட்களில் வாசனின் கார் பெரிய விபத்தில் சிக்கி இருந்தது.இந்த நிலையில் சீரியல் நடிகை சங்சீதா மற்றும் வாசன் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. காரணம் சங்கீதாவின் சகோதரரின் நெருங்கிய நண்பர் வாசன்.


அதுமட்டும் இல்லாமல் சங்கீதா அண்மையில் தனது திருமண அழைப்பிதலில் மணமகன் பெயர் Vயில் தொடங்கும் என பதிவிட அது வாசன் தான் என ரசிகர்கள் பேச தொடங்கிவிட்டனர்.தற்போது சங்கீதா தனது வருங்கால கணவர் பெயர் விக்னேஷ் என்றும் வாசன் எனக்கு சகோதரர் தான் எதுவும் தெரியாமல் பேசாதீர்கள் என தெளிவுப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement