• Jul 25 2025

பாக்கியலட்சுமி தொடரில் இனிமேல் ராதிகாவாக வனிதா தான் நடிக்கப் போகின்றாரா?-விளக்கம் அளித்த சீரியல் டீம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் டிஆர்பியில் முதலிடத்தைப் பிடித்து வேற லெவலில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ராதிகா என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா இந்த சீரியலை விட்டு விலகவுள்ளதாகவும் இவருக்கு பதிலாக வனிதா விஜயகுமார் தான் இனி ராதிகாவாக நடிக்க போகிறார் என்றும் செய்தி பரவி வருகிறது.


வனிதா தான் இனி ராதிகாவாக நடிக்க போகிறாரா என சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி உடன் கேட்டுவந்த நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது.பரவி வரும் செய்தி துளி கூட உண்மை இல்லை என்றும், ரேஷ்மா தான் தொடர்ந்து ராதிகா ரோலில் நடித்து வருகிறார் என்று தெரிவித்து உள்ளனர்.  

மேலும் நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் அவர் சொந்தமாக பெண்களுக்கான ஒரு துணி கடையையும் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement