• Jul 26 2025

தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் இருந்து வினோத் பாபு விலகுகின்றாரா?- அவரே வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இதில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக பவித்ரா மற்றும் வினோத் பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நகரும் இந்த சீரியலில் எப்போது அபிக்கு வெற்றி கொலைகாரன் இல்லை என்ற உண்மை தெரிய வரும் , அபி சுடர் தான் பெற்ற குழந்தை தான் என்று எப்போது சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.


அதிலும் இருவரும் தனித்தீவில் சிக்கி தற்பொழுது தான் அதிலிருந்து மீண்டு ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில் இருந்து ஹீரோ வினோத் பாபு விலகிவிட்டார் என செய்தி நேற்று பரவியது. அதாவது இவர் ஒரு ஷாட் பிலிம்மில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதனால் தான் சீரியலில் இருந்து விலகவுள்ளதாக கூறப்பட்டது.


இதனால் ரசிகர்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அத்தோடு அது பொய்யான செய்தி என அவரே தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். 'ஒரே ஒரே ஷார்ட் பிலிம் தான் நடிக்க போனேன், அதற்க்குள் இவ்ளோவா தெய்வமே.. நான் எங்கயும் போகல.. தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில்  தான் இருக்கேன், இருப்பேன்' என அவர் கூறி விளக்கம் கொடுத்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement