• Jul 24 2025

சோறு சாப்பிட்டு 5 வருஷம் ஆச்சு அவ்வளவு கஷ்டப்பட்டிட்டு இருக்கிறேன்- நடிகை தர்ஷா குப்தா கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கொரோனா லாக்டவுன் சமயத்தில் இன்ஸ்டாகிராமில் இஷ்டத்துக்கு கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசியதன் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர் வட்டமும் பெரிதானது. பின்னர் சீரியல்களில் நடிக்கத்தொடங்கிய தர்ஷாவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷாவுக்கு அதன்பின் மக்கள் மத்தியில் செம்ம ரீச் கிடைத்ததோடு, சினிமாவிலும் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அந்த வகையில் தர்ஷா குப்தா முதன்முதலில் நடித்த திரைப்படம் ருத்ரதாண்டவம். மோகன் ஜி இயக்கிய இப்படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா.


இதையடுத்து சினிமாவிலும் கவர்ச்சி ரூட்டில் களமிறங்கிய தர்ஷா, அடுத்ததாக ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் கிளாமர் ரோலில் நடித்தார். இதில் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்திருந்தார் .


இவ்வாறு சினிமாவில் படிப்படியாக பிசியாகி வரும் தர்ஷா, போட்டோஷூட் நடத்துவதை தொடர்ந்து வருகிறார்.இந்த நிலையில் பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்த இவர் நான் சோறு மற்றும் பிரியாணி சாப்பிட்டே 5 வருஷம் ஆச்சு. ரொம்ப மனசை கஷ்டப்படுத்தி உடம்பை இவ்வளவு மெயின்டெயின் பண்ணிட்டு வாறேன். சில கமெண்டுகள் வரும் இந்தப் பொண்ணு வாய்ப்புக்காக என்ன எல்லாமோ பண்ணுது என்று, எனக்கு சொல்ல தோணும் ஆமாம் மச்சி இப்படியாவது சொல்லுங்க பட வாய்ப்புக் கிடைக்கட்டும் என்று தான் சொல்லுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement