• Jul 25 2025

கழுத்து நிறைய வெள்ளிச் செயினில் கலக்கும் விஜய்யின் ரீல் தங்கை... உலக அழகிப் பட்டமே கொடுக்கலாம் போல இருக்கே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரையுலக பயணத்தைத் தொடங்கி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நிவேதா தாமஸ். அதாவது இவர் 2008-ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியிருக்கின்றார். 


பல குழந்தை நட்சத்திரப் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நடிகை என்ற அந்தஸ்தைக் கொடுத்த படம் 'ப்ரணயம்'. இத்திரைப்படம் 2011-ஆம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டு தமிழில் 'போராளி' என்ற திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாகவும் அறிமுகமானார் நிவேதா தாமஸ். 

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தமிழில் விஜய்யுடன் 'ஜில்லா', கமலுடன் 'பாபநாசம்', ரஜினி 'தர்பார்' உள்ளிட்ட படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.


இவ்வாறாக நடிப்பில் கலக்கி வந்த இவருக்கு தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர் கூட்டம் உருவாகத் தொடங்கி இருக்கின்றது. எனினும் தற்போது தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாத நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கில் இறங்கி கலக்கி வருகிறார். 


நிவேதா தாமஸ் சமீபகாலமாக படங்களைத் தாண்டியும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பொழுதைக் கழித்து வருவார். அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போதும் கழுத்து நிறைய வெள்ளிச் செயின் அணிந்து கலக்கல் போஸ் கொடுத்திருக்கின்றார். 


இப்புகைப்படங்களிற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியும் வருகின்றனர்.

Advertisement

Advertisement