• Jul 24 2025

எனக்கு அது வரவே வராது- 22 ஆண்டுகளில் ஏன் ஒரு பாடல் கூட பாடவில்லை – மனம் திறந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் பல தமிழ் திரைப் படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.இவர்  2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே” என்ற படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக சினிமா துறையில் கால் பதித்தார்.

அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, ஷாம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் போன்ற பாடல்களில் இசையமைத்திருக்கின்றார்.


இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் வெளியான லெஜண்ட் படத்திற்கு கூட இசையமைத்து இருந்தார். ஆனால் அந்த படம் அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படம் உள்பட 3 படங்களில் பணியாற்றி வருகிறார்.  22 ஆண்டுகள் பல படங்களுக்கு இசையமைத்தும் இதுவரை ஒரு பாடல் கூட ஹாரிஸ் ஜெயராஜ் பாடியது இல்லையாம்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்டது.அவர் கூறியதாவது “கண்டிப்பாக நான் பாடவேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது நான் ஒரு நல்ல பாடகரா என்ற கேள்வியை ஒரு கேட்டுக்கொள்வேன். ஆனால் அந்த கேள்விக்கு திருப்திகரமான பதில் கிடைக்குமா என்றால் கிடையாது. எனவே நான் ஒரு இசையமைப்பாளர் அதனால் இப்படித்தான் பாடுவேன் என்ற ஒரு எண்ணத்தை மக்களிடம் கொடுக்க கூடாது.


அந்த பாடலை ஒரு உண்மையான பாடகர் எப்படி அருமையாக பாடுகிறாரோ அப்படி என்னால் பாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தால் தான் நான் பாடுவேன்.  எனக்கு தெரியாத ஒரு தொழிலை நான் பார்க்கக் கூடாது என்று எதார்த்தமாக பதில் கூறினார். இந்த பதில் பாராட்டக்கூடிய வகையில் இருந்தாலும் தமிழ் சினிமாவில் அனிரூத், ஏ ஆர் ரகுமான் உள்பட பல இசைக் கலைஞர்கள் பாடல்களை பாடி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.


Advertisement

Advertisement