• Jul 23 2025

விஜய் சேர் பேசினது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்திச்சு- வீடியோ காலில் பேசிய குழந்தையின் பெற்றோர் அளித்த சுவாரஸியமான பதில்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தற்பொழுது ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரைப் பிடிக்காதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனங்களிலும் இடம் பிடித்திருக்கின்றார்.

அந்தவகையில் பல்லாவரத்தை சேர்ந்த குழந்தை ஒன்று சில நாட்களுக்கு முன்பாக வாரிசு படத்தின் பாடலை பார்த்து விட்டு விஜய் அங்கிளை பார்க்க வேண்டும் என அடம்பிடித்தது. இது குறித்த வீடியோ ஆனது சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. 


அதுமட்டுமல்லாது அந்த வீடியோ நடிகர் விஜய்யின் பார்வைக்கு பட்ட நிலையில், உடனடியாக அந்த குழந்தையிடம் வீடியோ காலில் விஜய் பேசி இருக்கின்றார். அதாவது "தோசை சாப்பிட்டேன் என்றும் நீங்க ரொம்ப க்யூட்னும்" விஜய்யிடம் அந்த குட்டிக் குழந்தை பேசும் காட்சி அடங்கிய அந்த வீடியோ நேற்றைய தினம் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் அந்தக் குழந்தையும் அவருடைய பெற்றோர்களும் பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தனர். அதில் அந்த  குழந்தை வாரிசு படத்திற்பு பிறகு தான் விஜய் சேரை ரொம்ப பிடிக்கும். என்றும் வாரிசு படத்திலிருந்தும் சில பாடல்களையும் பாடியுள்ளார். இந்த நிலையில்  அவருடைய  பெற்றோர் கூறியதாவது நிறைய பசங்க விஜய் சேர் பேசமாட்டாங்களா எனக் காத்திருந்தாங்க.


இது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்று தான் கூற முடியும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு அவர் எங்க கிட்ட பேசினது.அத்தோடு பாப்பாவுக்கு வாரிசு படம் என்றால் சூப்பராக பிடிக்கும் என்றும் கூறியுள்ளனர்.




Advertisement

Advertisement