• Jul 25 2025

இந்த போட்டியாளரால் தான் எனக்கு அப்படியொரு பெயரே வந்திச்சு- பிக்பாஸ் வீட்டிற்குள் கொந்தளிக்க ஆரம்பித்த அசல் கோளாறு

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாம் சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதற்கு முன்பு எலிமினேட் ஆன போட்டியாளர்கள் பலரும் தற்போது கெஸ்ட் ஆக வந்திருக்கிறார்கள். இதனால் வெளியில் தம்முடைய பெயர் எப்படி ரீச் ஆகி இருக்கின்றது என்றெல்லாம் கேட்டு வருகின்றார்.

மேலும் ஜி.பி முத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தது ஹவுஸ்மேட்டை மட்டுமல்லாது பார்வையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. அத்தோடு இன்றைய தினம் தனலக்ஷ்மி மற்றும் மணி கண்டன் ஆகியோர் வந்துள்ளனர். தனலக்ஷ்மியின் என்ட்ரியும் வெற லெவலில் உள்ளது.

அத்தோடு இந்த ஷோவில் பெண்களை தகாத வகையில் தொடுவதாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட அசல் கோளாறும் தற்போது வீட்டுக்குள் வந்திருக்கிறார்.இந்நிலையில் அசல் கோளாறு தன்னை எல்லோரும் தவறாக நினைத்ததற்கு ஷிவின் தான் காரணம் என சொல்லி சண்டை போட்டிருக்கிறார்.

"நாம பாக்காத ஒன்றை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள்" என ஷிவின் முன்பு சொன்னதால் தான், ஏதோ நடந்திருக்கிறது என மக்கள் யோசிக்க தொடங்கினார்கள். அப்படி ஒன்று நடக்கவே இல்லை" என சொல்லி அசல் கோளாறு ஷிவினுடன் சண்டை போட்டிருக்கிறார் இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம். 


Advertisement

Advertisement