• Jul 24 2025

எம்ஜிஆரின் அந்தஸ்தை உயர்த்திய முதல் படம்.. கருணாநிதி வசனம் எழுதி கிடைத்த வெற்றி..!

MGR
Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஏழைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக தன் நடிப்பினை வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை உருவாக்கியவர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவரின் எண்ணற்ற படங்களில் தெய்வத்தாய், ஆயிரத்தில் ஒருவன் படகோட்டி, அடிமைப்பெண் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அவ்வாறு இவர் முதன் முதலில் நடித்த படம் தான் சதிலீலாவதி. ஆனால் இப்படத்தில் இவர் ஹீரோவாக இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1936ல் தன் நடிப்பினை தொடங்கிய எம்ஜிஆர் ராஜகுமாரி என்னும் படத்தில் தான் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இப்படம் 1947ல் ஏ எஸ் ஏ சாமி இயக்கத்தில் வெளிவந்துள்ளது. மேலும் கருணாநிதி அவர்கள் முதன் முதலில் வசனம் எழுதியது இப்படத்தில் தான். இப்படம் எம்ஜிஆருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. தன் ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த இவர் ராஜகுமாரி மூலம் பிரபலமானார்.

இருப்பினும் இவரின் சாதாரணமான இயல்பு பெரிதும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து 1956ல் கண்ணதாசன் கதை எழுதி இவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் மதுரை வீரன். இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று 200க்கும் மேற்பட்ட நாட்கள் திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இது வெள்ளி விழா கண்ட எம்ஜிஆரின் முதல் படமாகும். இப்படத்தில் எம்ஜிஆர், பத்மினியுடன் இணைந்து நடித்திருப்பார். மேலும் சாதாரணமான நடிகராக இருந்த இவர் ஒரு அந்தஸ்துக்கு உயர்த்தியது இப்படம். அதைத்தொடர்ந்து எம்ஜிஆர் மற்றும் சாமி இருவரின் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் நல்ல வெற்றியை கண்டது.

அதன் பின் தமிழ் சினிமாவில் சிறந்த ஜாம்பவானாக வலம் வந்தார் எம்ஜிஆர். இவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற பல ஹீரோயின்கள் காத்திருந்தனர். இவரின் சண்டை காட்சிகளுக்கு என்றே ரசிகர்கள் கூட்டம் உண்டு. முதல் தலைமுறையை சேர்ந்த மூத்த நடிகர் என்ற பெருமையை பெற்று நம் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து வருகிறார்.


Advertisement

Advertisement