• Jul 25 2025

எனக்கு குழந்தை பிறந்ததும் முதல் வேலை இது தான்- மணிமேகலை சொன்ன சுவாரஸியமான விஷயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சியின் நிகழ்ச்ித் தொகுப்பாளராக இருந்து வந்தவர் தான் மணிமேகலை.இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும், ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் ரசிகர்களால் “ஆங்கர் சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்பட்ட மணிமேகலை உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் செய்வதற்கு இருவரது வீட்டாரும் சம்மதிக்காத காரணத்தால் இருவரும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். 


மேலும் மணிமேகலை தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றால் கூட தன்னுடைய வீட்டிற்கு செல்வதில்லை. ஆனால் அவரது அம்மா மாற்றும் தம்பியுடன் பேசுவதாகவும்  திருமணம் செய்ததிலிருந்து அவரது அப்பாவிடம் பேசியதில்லை என்று பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியும் தொகுப்பாளினியாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் தளம் ஒன்றினையும் நடத்தி வருகின்றார்.இந்நிலையில்  பிரபல சேனல் ஒன்றும் பேட்டியளித்திருந்த இவர் தனக்கு குழந்தை பிறந்தால் அது விஜய் டிவிக்குத்தான் சொந்தம் என்று கூறியுள்ளார். 


மணிமேகலை மற்றும் உஷேன் தம்பதிக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆகிறது, ஆனால் இவர்களுக்கு ஒரு குழந்தைகள் கூட பிறக்கவில்லை அதற்கான காரணமும் தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தன் குழந்தையை விஜய் டிவியின் வாசலில் போடும் அளவிற்கு விஜய் டிவி மணிமேகலைக்கு என்ன செய்தது என்று அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement