• Jul 26 2025

இவங்க யாரும் இல்லை என்றால் நடத்திருக்காது- அயலி வெப் தொடர் குருவம்மா போட்ட வீடியோ- குஷியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்படங்களுக்கு நிகரான வரவேற்பு சமீப காலமாக வெப் தொடர்களுக்கும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் வித்தியாசமான, கதையம்சத்துடன் சமீபத்தில் ஜீ ஓடிடி தலத்தில் வெளியான வெப் தொடர் அயலி.


1990-களின் காலகட்டத்தில், நடக்கும் சில மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து இந்த வெப் தொடர் எடுகாட்டிருந்தது.வயதுக்கு வந்த பெண்களுக்கு உடனே திருமணம் செய்து வைத்து விட வேண்டும். மேற்கொண்டு அவர்கள் படிக்க கூடாது. என பல கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமத்தில், ஒரு பெண் தன்னுடைய படிப்பை தக்க வைத்து கொள்ள அம்மாவில் துணையோடு ஒரு கிராமத்தையே எப்படி எதிர்கொள்கிறார் என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூறி இருந்தார் இயக்குநர்.

இந்த வெப் தொடர் வெளியாகி, தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த தொடரில் நடித்துள்ள நடிகர் - நடிகைகளும் கவனம் பெற்றுள்ளனர்.


அதில் முக்கியமானவர், 'அயல்' தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுமோல். குறைவான வயதுடைய நடிகை என்றாலும், மிகவும் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.


இந்த நிலையில் இவர் தற்பொழுது ஒரு வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அயலி வெப் தொடருக்கு இவ்வளவு சர்ப்போட் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப நன்றி இந்த தொடரில் என்னை நடிக்க வைத்த அனைவருக்கும் நன்றி. மக்கள் உங்களின் துணை இல்லாமல் இந்த வெப் சீரியல் ஓடி இருக்க முடியாது.இந்த தொடரில் என்னை குருவம்மாவாக ஏற்றுக் கொண்ட அனைவருக்கம் நன்றி என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement