• Jul 25 2025

11 மணி ஆகி விட்டது, நான் வந்துட்டேன்- சமந்தாவை வாட்டியெடுக்கும் பிரபலம்- வைரலாகும் வாட்ஸ்அப் சாட்டிங்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபலம். இவர் படம் நடித்தாலோ, விளம்பரங்கள், போட்டோ ஷுட் என எது செய்தாலும் ரசிகர்களிடம் வைரலாகிவிடும். இவர் இறுதியாக விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருக்கின்றார்.

காரணம் இவர் மயோசிடிஸ் என்னும் தசை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்து முழுமையான சுகத்தைப் பெற வெளிநாடுகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இவருக்கு என்ன தான் உடலில் பிரச்சனை ஏற்பட்டாலும், ஜிம்முக்கு போவதை தொடர்ந்த் செய்து வருகிறார். சினிமா ஷூட்டிங் முடித்து விட்டு ஓய்வில் இருக்கும் நேரங்களில் ஜிம்மில் கடுமையாக வொர்க்கவுட் செய்து தனது உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றார்.


 இந்நிலையில், ஜிம் டிரெய்னர் நள்ளிரவு நேரத்தில் நடிகை சமந்தாவுக்கு மெசேஜ் செய்தது குறித்த ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை சமந்தா வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.அதில் சமந்தாவுக்கு அவரது ஜிம் பயிற்சியாளர் 11 மணிக்கு ஷார்ப்பாக ஜிம்மில் இருக்க வேண்டும் என மெசேஜ் செய்ய, இன்று எனக்கு உடல் நலம் சரியாக இல்லை. இன்று ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என சமந்தா மெசேஜ் போட்ட நிலையில், 11 மணி ஆகி விட்டது, நான் வந்துட்டேன்.


நீ எங்கே காணோம் என ஜிம் டிரெய்னர் லீவே கொடுக்காமல் படுத்தி எடுக்கிறார் என தங்களுக்குள் நடைபெற்ற சாட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில், அந்த மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட் தீயாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement