• Jul 25 2025

நெக்லஸ் போட்டது ஒரு குற்றமாடா..? இவரா இப்படி.. விளாசும் நெட்டிசன்ஸ்.. சர்ச்சையில் டாப்ஸி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'ஜூம்மான்டி நாடம்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் டாப்ஸி. இதனை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான 'ஆடுகளம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் தடம் பதித்தார். இதனைத் தொடர்ந்து பல மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்


இவ்வாறு சினிமாவில் பிசியான ஒரு நடிகையாக வலம் வரும் டாப்ஸி சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்டு ராம்ப் வாக் செய்தார். அதில் உள்ளாடை அணியாமல் படு கிளாமரான உடையணிந்து வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்தார் டாப்ஸி. 


டாப்ஸியின் இது குறித்த வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதோடு தற்போது சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. அந்தவகையில் பேஷன் ஷோவுக்கு டாப்ஸி அணிந்து வந்த நெக்லஸ் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. 


அதாவது அந்த நெக்லஸில் லட்சுமியின் உருவம் இடம்பெற்று இருந்தது. கவர்ச்சி உடை அணிந்து இப்படி கடவுளின் உருவம் பொறித்த நகையுடன் ரேம்ப் வாக் வந்தது இந்து கடவுளை அவமதிக்கும் செயல் என்றும் நடிகையாக இருந்துகொண்டு இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளலாமா என நெட்டிசன்கள் டாப்ஸியை பலவாறு கமெண்டுகளின் மூலம் விளாசி வருகின்றனர்.


Advertisement

Advertisement