• Jul 24 2025

வித்தியாசமான உணர்வாக இருக்கின்றது- முதன் முறையாக மகள் குறித்து குட் நியூஸ் சொன்ன ஸ்ரேயா சரண்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ரேயா சரண். இவர் இவர் ரஜினியுடன் சிவாஜி, விஜய்க்கு ஜோடியாக அழகிய தமிழ்மகன், தனுஷுடன் குட்டி, ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை போன்ற படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். 


இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆண்ட்ரூ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரேயாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு ராதா என்றும் பெயர் வைத்துள்ளார்.


குழந்தை பிறந்த பின்னர் சினிமாவில் படு பிசியாக நடிக்கத் தொடங்கியுள்ள நடிகை ஸ்ரேயா 40 வயது ஆகியும் கவர்ச்சியைக் கைவிடாமல் தொடர்ந்து தொடர்ந்து விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். இப்புகைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன. 


இந்த நிலையில் ஸ்ரேயா தற்பொழுது ஒரு சந்தோஷமான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதாவது இவர் தன்னுடைய மகளை முதன் முறையாக பாடசாலையில் சேர்த்திருக்கின்றார்.இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement