• Jul 25 2025

இது ஒரு மொக்க மசாலா படம்... 'மாமன்னன்' படத்தைத் தாறுமாறாக கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தான் பேசக்கூடாது தனது படம் தான் பேசவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்ற இயக்குநர்களில் ஒருவர் தான் மாரிசெல்வராஜ். இவர் தனது படங்களின் வாயிலாக பல உண்மை சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். இதனால் இவரது இயக்கத்தில் உருவாகும் படங்களிற்கென்று ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உண்டு. 


அந்தவகையில் இவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தினை இயக்கி இருக்கின்றார். இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்தோடு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய வேடத்தில் நடிகர் பகத் ஆகியோரும் நடிக்கின்றனர். 


நேற்றைய தினம் வெளியாகியுள்ள இப்படத்திற்குப் பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தினை விமர்சகர் ப்ளூசட்டை மாறனும் விமர்சித்துக் கருத்து வெளியிட்டுள்ளார்.


அந்தவகையில் அவர் கூறுகையில் "படம் இடைவேளையில் முடிந்து விடுகிறது, இடைவேளைக்கு அப்பறம் வேற படம் ஓடுது, அதுவும் மொக்க மசாலா படம் ஓடுது. படத்துல வடிவேலு தான் ஹீரோன்னு சொல்லலாம். படத்தோட இரண்டாவது பாதியை சும்மா ஒப்பேத்தி வச்சிருக்காங்க, அதேபோன்று கிளைமாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு அவ்வளவுதான், சாதி பிரச்சனைய படமா எடுக்குறேன்னு ஹீரோ வில்லன் சண்டையை படமா எடுத்து வச்சிருக்காங்க" எனக் கூறி தாறுமாறாக விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். 

Advertisement

Advertisement