• Jul 24 2025

அட பாவமே..'ஜவான்' படத்திற்கு வந்த திடீர் சோதனை! பேரதிர்ச்சியில் இயக்குநர் அட்லீ,ஷாருக்கான்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் கிங் காங் ஷாருக்கான் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் திரைப்படமான 'ஜவான்' இன்று (செப்டம்பர் 7ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியானது. 


ஜவான் திரைப்படம், இன்று காலை முதலே ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில்.. பலர் ஷாருக்கானின் முந்தய படமான 'பதான்' படத்தை போல், இந்த படமும் 1000 கோடி வசூல் சாதனை செய்யும் என கூறி வருகிறார்கள். இப்படி வெளியாகும் விமர்சனங்களால்... அட்லீ, ஷாருக்கான் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் உச்ச கட்ட மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.


ஆனால் துரதிஷ்ட வசமாக 'ஜவான்' வெளியாகி... 24 மணிநேரம் கூட இன்னும் ஆகாத நிலையில், டோரண்ட், தமிழ்ராக்கர்ஸ், டெலிகிராம் மற்றும் மூவிருல்ஸ் ஆகியவற்றில் எச்டி பதிவிறக்கத்தில் ஜவான் படம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இயக்குநர் அட்லீ மற்றும் நடிகரும், இந்த படத்தின் தயாரிப்பாளருமான ஷாருக்கான் ஆகியோரை உச்சகட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


இப்படி திருட்டுத்தனமாக ஆன்லைனில் 'ஜவான்' வெளியாகியுள்ளதால், இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படலாம் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் சமீப காலமாக தரமான படங்கள் ஆன் லைனில் வெளியான போதிலும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், பெரிதாக பாதிப்பு இருக்காது என்றே  நம்பப்படுகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement