• Jul 25 2025

இனிமேல் அது எல்லாம் வேண்டாம் வயதாகிப் போகின்றது-சமந்தாவின் உருக்கமான பதிவு.!

stella / 2 years ago

Advertisement

Listen News!


  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌ நடிகை சமந்தா. தமிழ் தெதலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளில் நடித்து வருகின்றார். கடைசியாக  சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார். 

தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்கும் “சகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது. சகுந்தலம் திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் எழுதி இயக்குகிறார்.


இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு,. இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில்," வயதாகும் வேளையில் நான் அதிக தூரத்தை கடந்து செல்கிறேன். எல்லா அன்புக்கும் பாசத்திற்கும்... ஒவ்வொரு புதிய நாளுக்கும் அது தரும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நான் நன்றியை உணர்கிறேன். என்னை பாதித்த விஷயங்கள். இனி அது வேண்டாம். ஒவ்வொரு நாளும் அன்பு மற்றும் நன்றியின் அலை எழட்டும். நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.



Advertisement

Advertisement